இந்தியாவில், 2023 ஏப்ரல் மாதத்தின் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.87 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி என்ற அடிப்படையில், கடந்த 2018 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி (Goods and Services Tax - GST) அறிமுகப் படுத்தப்பட்டது. இந்தியாவில், ஏப்ரல் மாதத்தின் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1,87,035 லட்சமாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. சி.ஜி.எஸ்.டி ரூ.38,440 கோடியும், எஸ்.ஜி.எஸ்.டி ரூ.47,412 கோடியும், ஐ.ஜி.எஸ்.டி ரூ. 89,158 கோடியும் மற்றும் செஸ் வரி ரூ.12,025 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.